Tuesday, January 26, 2021

தீகவாபி தூபி மறுசீரமைப்புக்கு 30,000 தரமான செங்கக்கற்கள் - உன்னத நோக்கத்திற்கு பங்களிக்கலாம் என்கிறார் பாதுகாப்பு செயலாளர்


தீகவாபி தூபி மறுசீரமைப்பு திட்டத்திற்கு நாளொன்றுக்கு 30,000 தரமான செங்கக்கற்கள் கோரப்படுவதால், இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் செங்கற்களை உற்பத்தி செய்வதற்கான வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். 

மேற்படி தூபி மறுசீரமைக்கும் உண்ணத நோக்கத்திற்கு பங்களிக்க விரும்பும் பக்தர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், இதற்கென தனியான வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இந்த வங்கிக் கணக்கில் நன்கொடைகளின் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்திய அவர், மேற்படி வங்கிக் கணக்கு விவரங்கள் தற்பொழுது ஊடகங்கள் மூலம் பிரச்சாரப்படுத்தப்படுகின்றது என்றார். 

அம்பாறையிலுள்ள தீகவபிய தூபி வளாகத்திற்கு இன்று (26 ஜன.) நேரில் விஜயம் நிலைமைகளை ஆராய்ந்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல குணரத்ன இந்த கருத்துக்களை தெரிவித்தார். 

மூன்று வருட காலத்திற்குள் இந்த மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், முன்னர் இருந்தவாரே மஹா தூபி அமைக்கப்படும் என்றும் பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment