Tuesday, April 20, 2021

30 நொடிகளில் கொரோனா வைரஸை கண்டுபிடிக்கலாம் - இலங்கை விஞ்ஞானி தலைமையிலான குழு கண்டுபிடிப்பு


30 நொடிகளுக்குள் கோவிட் வைரஸ் தொற்றினை கண்டுபிடிக்க கூடிய பரிசோதனை ஒன்றை இலங்கை விஞ்ஞானிகள் உட்பட குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் நிவ் மெக்சிகோ பிராந்தியத்தில் பணியாற்றும் இலங்கை விஞ்ஞானிகள் உட்பட குழுவினர் இந்த பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த பரிசோதனை குழுவின் பிரதானியாக இலங்கை விஞ்ஞானியான துவினி தினுஷிக்கா ராஜபக்ஷ செயற்பட்டுள்ளார்.

பொதுவாக பீசீஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் முடிவுகள் பெறுவதற்கு இரண்டு நாட்களாகின்றது. புதிய முறையின் மூலம் 30 நொடிகளில் முடிவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளளது.

இந்த முறையில் பலூன் ஒன்றை ஊதி அதில் சுவாசித்த காற்றை கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment