Thursday, May 6, 2021

தினமும் 1,500,000க்கும் அதிக முகக்கவசங்கள் சூழலில் சேருகிறது - சுற்றாடல் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு 1,500,000க்கும் அதிக முகக்கவசங்கள் சூழலில் சேருவதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாவனைக்குட்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் காரணமாக இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இது சுகாதார மற்றும் சுற்றாடல் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முதற்காலாண்டில் மாத்திரம் 800 டன் முகக்கவசங்கள் பாவனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

இது சுற்றாடல் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment