Wednesday, May 5, 2021

தேர்தல் முறைமை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 2 முஸ்லிம்கள் - ஹக்கீம், றிசாத் கட்சிகளுக்கு இடமில்லை


தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில், 15 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரால் நேற்று சபையில் அறிவிக்கப்பட்ட இந்தக் குழுவில், சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கபிர் ஹஷிம் ஆகியோர் சிறுபான்மையின பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ், பவித்ரா வன்னியாரச்சி, விமல் வீரவன்ச, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment