Thursday, May 6, 2021

சமூகத்தின் சகல பிரிவினரும் பெருநாளை கொண்டாட நிந்தவூரில் அழகிய ஏற்பாடு - ஏனைய ஊர்களும் பின்பற்றலாமே...?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக 02வது வருடமாகவும் ஏழை எளிய மக்களுக்கான றிஸாலாவின் இலவச ஆடையகம் திறப்பு                   

ஏழை எளிய மக்களின் பெருநாள் ஆடைகளுக்கான துயர் துடைக்க நிந்தவூரில் இரண்டாவது முறையாக Risala அமைப்பின் மிகப்பெரும் முயற்சியின் பலனாக நிந்தவூரில் RISALA_FREE_TEXTILES இன்று மாலை 4.00 மணியளவில்(2021.05.05) திறக்கப்பட்டது. 

அனைத்து மக்களும் பெருநாள் தினத்தை மன நிறைவாக கொண்டாட வேண்டுமென்பதற்காக  இதனைத் திறந்து வைக்க உள்ளோம்.

கடந்த வருடமும் எமது ஊர் மக்களின் பேராதரவோடு மிகப் பெரும் வெற்றியைப் பெற்று, சுமார் 360 குடும்பங்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வைத்து மனநிறைவோடு நாமும் பெருநாளை கொண்டாடினோம்.

இம்முறை பெருநாள் ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு இயலாமல் இருக்கின்ற குடும்பங்கள் தாராளமாக எம்மை அணுகி பெருநாள் ஆடைகளை கடைகளுக்குச் சென்று கொள்வனவு செய்வது போன்று தங்களுக்கு தேவையானவற்றை Risala free textiles வருகை தந்து உங்களுக்கான ஆடைகளை தெரிவு செய்து கொள்ள முடியும்.

இச்செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு உதவிய, உதவி கொண்டிருக்கின்ற, உதவப் போகின்றன அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நீங்களும் இதன் பங்குதாரர்களாக மாறவேண்டுமானால் உங்களிடம் உள்ள ஆடைகளை எமக்கு தந்து உதவுங்கள் அல்லது ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு பணமாக எமக்கு உதவுங்கள்.

அதேபோன்று ஆடைகள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை உள்ள குடும்பங்களில் எமக்கு அடையாளப்படுத்தும் தாருங்கள்.

நாம் சமூகத்திற்காகவும் சமூக வறுமை ஒழிப்புக்காகவும் எப்போதும் முன் நிற்போம்.

இடம்: பாத்திமா முஸ்லிம் பெண்கள் அரபுக் கல்லூரிக்கு முன்னாலுள்ள வீதியில் அமைந்துள்ள கடை.

றிஸாலா அமைப்பு 

நிந்தவூர்.

No comments:

Post a Comment