Thursday, May 6, 2021

பிரதமர் மஹிந்தவை சந்தித்ததை பேஸ்புக்கில், விமர்சிப்பது முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமல்ல - இஷாக் ரஹுமான் Mp


முஸ்லிம் எம்.பிக்களின் சமூகம் சார்ந்த விடயங்களை முகநூல்களில் விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல என இஷாக் ரஹுமான் எம்.பி. தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை  அலரி மாளிகையில் சந்தித்தமை தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள் குறித்து பேசுவதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மாலை 5.30 மணிக்கு சந்தித்தோம். அதில் முஸ்லிம் மார்க்கத் தலைவர்களினதும், அரசியல் தலைவர்களினதும் விடுதலை மற்றும் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. இதற்கான தீர்வுகள் மிக விரைவில் எட்டப்படவுள்ளன.

அத்துடன் கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் குறித்தும் அங்கு பேசப்பட்டது. இவ்வாறான நிலையில் இப்தாருக்கான நேரம் நெருங்கியதைத் தொடர்ந்து அங்கு திடீரென இப்தார் ஒழுங்குகள் செய்யப்பட்டன. 

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சமூகம் எதிர்நோக்கும் தற்கால பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக சந்தித்ததை இன்று அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் பிழையான முறையில் முகநூல்களில் விமர்சிப்பதானது முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகம் உணர்ச்சிவசப்படும்சமூகமாக தற்கால சூழலில் இருந்து விட கூடாது 

கடந்த நல்லாட்சியில் மிக பலமாக இருந்து எமது முஸ்லிம் கட்சிகளால் சமூகம் சார்ந்த எந்த விடயத்தையும் சாதிக்க முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment