Friday, January 24, 2014

19 வகையான பதார்த்தங்களை உணவில் சேர்ப்பதற்கு சுகாதார அமைச்சு தடை விதிப்பு



19 வகையான சுவையூட்டிகளை உணவில் சேர்ப்பதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.



உணவு ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த வருடம் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தடையை விதித்திருப்பதாக, சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன்படி எலொய்ன், பேர்பெரின், பெட்டா எசரோன், கேட் ஒயில், கலமஸ் ஒய்ல் உள்ளிட்ட 19 சுவையூட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



அதேபோன்று, சில சுவையூட்டிகளை பயன்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சிடம் அனுமதி கோர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.



அதன்படி, டய்எசட்டின், டய்ஈதர், ஈதயில், எசிடெட், ஈதயில் லெ;கொஹோல், க்ளிசரோல், அய்சோப்ரொபயில் எல்கஹொல், ப்ரொபிலின் க்ளயிகோல், ட்ரைஎசட்டின் போன்றவற்றை பயன்படுத்த முன்கூட்டிய அனுமதி கோரப்பட வேண்டும்.



அத்துடன் பால், பாலுற்பத்தி பொருட்கள், ஐஸ்பழம், மாகரின், பழங்கள் மற்றும் மரக்கறிகள் போன்றவற்றுக்கு சுவையூட்டிகளை சேர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment