(Sfm) தாம் அரசியல் வாதிகளுக்கு எதிரானவர் இல்லை என்று, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஜனநாயகம் ஏற்பட வேண்டுமாயின், அரசியல் வாதிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த முறை தேர்தல்களுக்காக பதிவு செய்யப்பட்ட மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப் போவதில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அந்த கட்சிகளின் பொது செயலாளர்கள் தொடர்பில் நிலவுகின்ற சிக்கல்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை பொதுஜன காங்கிரஸ் என்றும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி தமது பெயரை முஸ்லிம் சமாதான முன்னணி என்றும் மாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், இந்த முறை தேர்தல்களுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தப் போவதில்லை என்ற தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment