Wednesday, January 29, 2014

பாவனைக்குதவாத 408 லட்சம் தொன் பருப்பு கண்டுபிடிப்பு - 6 சந்தேக நபர்கள் கைது



பாவனைக்குதவாத சுமார் 408 இலட்சம் ரூபா பெறுமதியான தொன் பருப்பு, வெல்லம்பிட்டி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.



நுகர்வோர் அதிகாரச்சபை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அங்குள்ள கலஞ்சியசாலையில் பதுக்கி வைக்கபட்டிருந்த மேற்படி பருப்புத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.



எண்ணெய் மற்றும் சாயம் கலந்து புதிய பருப்பை போன்று உருமாற்றிய நிலையில் விநியோக்கும் நோக்கில் இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என நுகர்வோர் அதிகாரச்சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.



இது தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டுக்கு பருப்பு இறக்குமதி செய்யும் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான களஞ்சியச்சாலையில் இருந்த இந்த பருப்புத் தொகை கைப்பற்றப்பட்டது என்றும் வண்டுகள் தாக்கிய பருப்பை சுத்தப்படுத்துவதற்கான இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.



மேலும் அதிக தொகையான சாயம் மற்றும் எண்ணெய் என்பனவும் கைப்பற்றப்பட்டன என்றும் குறித்த எண்ணெய் உடலுக்கு கேடு விளைவிக்கும் விலங்கு கொழுப்பால் தயாரிக்கப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.



சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் இன்று (29) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment