Thursday, January 30, 2014

ஆட்கடத்தலில் ஈடுபட்ட 4 இலங்கையர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத் தண்டனை



(த காடியன்)



பல்வேறு வழிகளில் இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பும் முகவர்களாக தொழிற்பட்ட 5 போருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



நான்கு இலங்கையர்களும் ஒரு பிரித்தானிய பிரஜையும் இவர்களில் அடங்குகின்றனர்.



சட்டவிரேதமாக பிரித்தானியாவிற்கு அழைத்துச் செல்வதற்கு இவர்கள் 4500 பவுண்ஸை கட்டணமாக அறவிட்டு வந்ததாக பிரித்தானிய உட்துறை செயலகம் தெரிவித்துள்ளது.



சட்டவிரோதமாக வாகனங்களில் பிரித்தானியாவிற்கு ஆட்களை கடத்தும் பல்வேறு முயற்சிகளை அந்நாட்டின் எல்லைப்பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.



சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழையும் குடியேற்றவாசிகளில் சிலர் அங்கிருந்து போலியான ஆவணங்களை பயன்படுத்தி வட அமெரிக்காவிற்கும் பயணிப்பதாக உட்துறை செயலகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.



பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல்கள் முன்னெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட லூடொன் பகுதியை சேர்ந்த 37 வயதான சுதர்ஷன் ஐயகொடி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 வருடம் 4 மாதம் சிறைத்தண்டனை விதித்தது.



குறித்த குற்றத்திற்காக 42 வயதான சுப்ரமணியன் விக்னராஜாவிற்கு 3 வருடம் 4 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.



அத்துடன் கமலநேசன் கந்தையா, ஜோன் அனீஸ் சௌந்தரநாயகம் ஊவைஸ் ஆகிய இரண்டு இலங்கையர்களும் குறித்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



கென்ட் பொலீசார், தேசிய குற்றத்தடுப்பு முகவர் நிலையம் உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்புடன் உட்துறை செயலகம் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.




No comments:

Post a Comment