Monday, January 27, 2014

மத்திய கிழக்கில் தொழில் புரியும் இலங்கையர்கள் 80 ஆயிரம் பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்



(Tw) மத்திய கிழக்கில் தொழில் புரியும் இலங்கை பிரஜைகளில் 80 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.



தனிப்பட்ட நலன், அச்சுறுத்தல், அழுத்தங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அந்நிய மதங்களுக்கு பாதுகாப்பு இல்லாமை ஆகியன காரணமாக இவர்கள் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொள்கின்றனர்.



இலங்கையின் அரசியல்வாதிகளே இதற்கு முற்றாக பொறுப்புக் கூறவேண்டும். அரசியல்வாதிகள் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றாத காரணத்தினால், இலங்கை பிரஜைகள் அவ்வாறு இஸ்லாத்தை தழுவும் நிலை ஏற்பட்டுள்ளது.



டுபாய் நாட்டில் தொழில் புரிந்து வரும் இலங்கை பிரஜைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவிக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment