Sunday, January 26, 2014

நீரில் மூழ்கிய சம்பவங்களில் ஆறு பேர் பலி



நீரில் மூழ்கிய சம்பவங்களில் ஆறு பேர் பலியாகினர். மூன்று பிரதேசங்களில் இந்த அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.



மட்டக்களப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் சிலர் நீரில் மூழ்கியுள்ளனர்.



மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள் இவ்வாறு நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டனர்.



எனினும் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.



இதனிடையே, கல்கிஸ்ச கடலில் குளிக்கச் சென்ற ஒருவர் கடலில் மூழ்கி பலியானார்.



நாகொட மருத்துவமனையைச் சேர்ந்த 35 வயதான மருத்துவர் ஒருவரே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்தநிலையில், தொம்பே கபுகொட பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் நீழில் மூழ்கி பலியாகினர்.



கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு பலியானதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


No comments:

Post a Comment