Friday, January 24, 2014

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர்களின் உதவியுடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாசல்





(எம்.ஏ.றமீஸ்)



அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஆசிரியர்களின் உதவியுடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாசல் இன்று(24) திறந்து வைக்கப்பட்டது.

அதிபர் மௌவலி வி.ரி.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, பள்ளிவாசலின் திறப்பினை ஆசிரியர் அப்றஜ் றிலா அதிபரிடம் வழங்கி வைத்தார்.



இதன்போது பிரதி அதிபர்களான ஏ.எல.அன்வர், எஸ்.எல்.எம்.நசீர்,எம்.சி.சரீனா உம்மா, ஏ.கே.நியாஸ் மற்றும் உதவி அதிபர்களான ஏ.எல்.அப்துல் பத்தாஹ்,எம்.ஏ.அபுதாஹிர் உள்ளிட்ட பாடசாலையின் வலயத் தலைவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிபர் மௌலவி வி.ரி.எம்.ஹனீபா குறிப்பிடுகையில், பள்ளிவாசலுக்காக உதவி செய்பவர்கள் இறைவனின் சன்னிதானத்தில் உயர்ந்த அந்தஸ்தினைப் பெறுகின்றார்கள். பள்ளிவாசல்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் பராமரிக்கப்படுவதென்பது நாம் தொழுகைக்காக பயன்படுத்தலையே குறிக்கின்றன. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்புறாத வகையில் இந்த பள்ளிவாசல் பயன்படுத்தப்பட வேண்டும். மாணவர்களும், ஆசிரியர்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் நன்கு பயன்படுத்தி அல்லாஹ்வின் அன்பினையும் அருளினையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றார்.











No comments:

Post a Comment