Sunday, January 26, 2014

பௌத்த தேரர் மீது துப்பாக்கி சூடு - பாணந்துறையில் சம்பவம்



பாணந்துறை, கலிகொட ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி தங்குமிடத்துக்கு இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பாணந்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இரத்தினபுரி - பொதுபிடியே பக்னசேகர தேரர் தங்கியிருந்த இடத்திற்கே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தேரர், பாணந்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.



நேற்று இரவு 10.00 மணியளவில், கறுப்பு உடையணிந்த ஒருவர் நின்று கொண்டிருந்ததை கண்டு சந்தேகமடைந்து உள்ளே சென்று கதவை பூட்டியவேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொதுபிடியே பக்னசேகர தேரர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.



துப்பாக்கிச் சூட்டில் தேரருக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.



அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment