இத்தாலி தலைநகர் ரோமில் இஸ்ரேல் நாட்டு தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று தபால் பார்சல்கள் வந்தன. அவற்றை தூதரக ஊழியர்கள் பிரித்து பார்த்தனர்.
அவற்றில் வெட்டப்பட்ட பன்றிகளின் தலைகள் இருந்தன. அவை மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியது. ரோம் நகரில் உள்ள யூதர்களின் வழிபாட்டு கூடத்துக்கும் இதுபோன்று பன்றி தலைகள் அடங்கிய பார்சல்கள் வந்தன.
அவற்றை அனுப்பியது யார்? எதற்காக அனுப்பப்பட்டது என தெரியவில்லை. இதுகுறித்து தபால் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment