Sunday, January 26, 2014

'முடி' விவகாரத்தில் பல்டி அடித்த சரத் பொன்சேக்கா..!



ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரபாகரனின் உடலிலுள்ள ஒரு முடிக்கும் ஒப்பிடக் கூடியவர் அல்ல என்று தான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



இதனால் தான் கூறிய நபர் அமைச்சர் மேர்வின் சில்வாவின் உடலிலுள்ள ஒரு முடிக்கும் ஒப்பிடக் கூடியவர் அல்ல என கூறுவதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.



தெஹிவளை பிரதேசத்தில் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,



மேர்வின் சில்வா தனது எதிரிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினாலும் எதிரிகளின் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்துவதில்லை. எனினும் ஜனநாயக நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன.



எனது மகள் ஒருவர் திருமணம் செய்து 10 வருடங்கள் ஆகின்றது. எனினும் ஆட்சியாளர்கள் எனது மகள் அவரது கணவருடன் இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்க இடமளிக்கவில்லை. பிள்ளைகள் உள்ள ஆட்சியாளர்களே இவ்வாறு சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றனர்.



ஒரு நாட்டில் போர் முடிந்து விட்டால் சட்டமூம் ஒழுங்கும் இரு்க்க வேண்டும். நாட்டில் அமைதி நிலவுவதாக அரசாங்கம் உலகத்திற்கு கூற முயற்சித்து வருகிறது.



எனினும் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணியின் காதலி வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதுடன் காதலனை கொலை செய்த பிரதேச சபை தலைவருக்கு அரசாங்கம் உதவி புரிகின்றது. இப்படியான நிலையில் நாட்டின் சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்த முடியுமா எனவும் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment