Wednesday, January 29, 2014

உங்களிடம் துப்பாக்கிகள் உள்ளதா..?






(Nf) தன்னியக்க துப்பாக்கிகளை சிறைச்சாலைகளிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.



பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார்.



வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது, கைதிகள் துப்பாக்கியை பயன்படுத்திய சம்பவத்தை அடுத்து, சிறைச்சாலைகளில் இருந்த தன்னியக்க துப்பாக்கிகள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டன.



அதன் பின்னர் சிறைச்சாலைகளுக்கு ரிபீடர் வகை துப்பாக்கிகள் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



கைதிகளை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றங்களுக்கு வழக்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லும் போது, பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment