ஐக்கிய அரபு எமிரேட் சிறைகளில் கிடைக்கும் வசதிகள் காரணமாக, இந்திய கைதிகள், தாய்நாட்டுக்குத் திரும்ப மறுக்கின்றனர்.
இதுகுறித்து, அபுதாபியில் உள்ள, இந்திய தூதர் சீதாராம் கூறியதாவது: கடந்த 2011, நவம்பரில், இந்தியாவிற்கும், யு.ஏ.ஈ.,க்கும் இடையில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, இங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, 80 சதவீதம் இந்திய கைதிகள், தாய்நாட்டுக்கு திரும்பி சென்று, மீதியுள்ள தண்டனைக் காலத்தை முடிப்பதற்காக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.ஆனால், 10 சதவீதத்தினர் மட்டுமே தாய்நாடு திரும்ப, தயாராக இருந்தனர். மீதியுள்ள தண்டனை காலத்தை, இந்திய சிறையில் கழிப்பதற்கு விருப்பம் தெரிவித்து, ஏறக்குறைய 120 கைதிகள் விண்ணப்பித்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள, சிறைகளில் கிடைக்கும் வசதிகளால், பலர் தாய்நாட்டுக்கு திரும்ப மறுத்துள்ளனர். இன்னும் சிலர், சிறையில் இருக்கும் விஷயத்தை தங்கள் வீட்டினருக்கு தெரியப்படுத்தவில்லை; சில கைதிகள், தண்டனையில் இருந்து மன்னிப்பு வேண்டி, சட்ட உதவி கோரியுள்ளனர். இவ்வாறு, சீதாராம் கூறினார்.
No comments:
Post a Comment