(Adt) அக்மீமன தயாரத்ன தேரர் உட்பட சிங்கள ராவய அமைப்பின் சகல பிக்குமாருக்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்த தற்காலிகமான தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் அலுவலகத்திற்கு எதிரில் அண்மையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேற்படி வழக்கு விசாரணைகள் முடியும் வரை சிங்கள ராவய அமைப்பின் பிக்குமார் எவரும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கள ராவய அமைப்பு பிரதமர் அலுவலகத்திற்கு எதிரில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், பிரதமரின் அலுவலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்தது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
No comments:
Post a Comment