Sunday, January 26, 2014

கிழக்கு மாகாண சுன்னத் வல்ஜமாஅத் எழுச்சி மாநாடு (படங்கள் இணைப்பு)





(எம்.ஏ.றமீஸ்)



ஈஸ்டன் அஹ்லுஸ் ஸூன்னாஹ் பவுண்டேஷன் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண சுன்னத் வல்ஜமாஅத் எழுச்சி மாநாடு அமைப்பின் தலைவர் மௌலவி ஏ.சி.எம்.முஹியத்தீன் மன்பயி தலைமையில் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் திறந்த வெளியில் இடம்பெற்றது.



வரலாறு காணாத பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டிற்கு ஈராக் நாட்டின் உலகறிந்த மார்க்க பேரறிஞர் அஷ்-ஷேய்க், அஷ்ஷெய்த் அபீபுத்தீன் அஷ்ஷெயித் அப்துல் காதிர் மன்ஸூருத்தீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.



ஈஸ்டன் அஹ்லுஸ் ஸூன்னாஹ் பவுண்டேஷன் பிரதித் தலைவர் மௌலவி அல்-ஹாபிழ் எம்.ஐ.எம்.றியாஸ் அல்தாபி அவர்களின் நெறிப்படுத்தலின்கீழ் நடைபெற்ற 'இஸ்லாத்தின் பார்வையில் தர்ஹாக்களின் நிலை என்ன?' எனும் தலைப்பில் சுன்னத் வல்ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவரும் தென்னிந்திய மார்க்க பேரறிஞருமான மௌலவி அல்-ஹாபிழ் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி பேருரையாற்றினார்.



ஜனாதிபதியின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளரும்,தேசிய ஐக்கியத்திற்கான சர்வமதங்கள் கூட்டமைப்பின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான தலைவருமான அல்-ஹாஜ் கலாநிதி அஸ்ஸெய்யித் ஹஸன் மௌலானா, கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், அம்பாறை மாவட்ட அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் உலமா சபையின் தலைவர் அல்-ஹாஜ் அஸ்ஸெய்யித் அல்ஆலிமுல் காமில் எஸ்.ஏ.ஆர்.எம்.கலீல் மௌலானா, அல்-ஹாஜ் அஸ்ஸெய்யித் ஹனீப் மௌலானா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் முன்னிலை அதிதிகளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வின்போது விஷேட சொற்பொழிவுகள் மற்றும் சமூகத்தில் அன்றாடம் எழக்கூடிய பல்வேறான சந்தேகங்களை மையப்படுத்திய கேள்விகளுக்கு உடனுக்குடன் நேரடியாக தெளிவு மிக்க விபரங்களடங்கிய பதில்களும் வழங்கப்பட்டன.



இது தவிர, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் பிரமுகர்கள் போன்றோருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
















No comments:

Post a Comment