சில ராஜதந்திரிகள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதுடன், தங்களது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துமாறு இலங்கையை பலவந்தப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறைவி;ன் பின்னர் நாட்டில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஏனைய முனைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நன்மை ஏற்படுத்த வேண்டுமாயின் உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் உள்விவகாரங்களை சர்வதேச மயப்படுத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஒரு தலைப்பட்சமான கருத்துக்களை முன்வைக்கும் தரப்பினர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை கண்டு கொள்வதில்லை என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.
பல இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், காணப்படும் முகாம்கள் தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானவை என தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், படையினர் அதில் தலையீடு செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment