அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அசாத் சாலி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அரசாங்கம் ஆறு மில்லியன் ரூபா செலவில் அமைச்சர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் இன்னமும் வீதிகளிலும், இடைத்தங்கல் முகாம்களிலும் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ தங்குமிடங்களை புனரமைப்பதற்காக அரசாங்கம் 510 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் கசினோ, பாலியல் தொழில் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் ஆறு கலைஞர்கள் களமிறக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரே இரவில் இந்த கலைஞர்கள், ஒரே இரவில் நகைச்சுவை கலைஞர்களாக மாற்றமடைந்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அரசாங்கம் தயட்ட கிருள கண்காட்சிக்காக பாரியளவில் பணத்தை விரயமாக்கி வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குடும்ப உறுப்பினர் ஒருவரை பிரதமராக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொதுபல சேனா ஆகிய கட்சிகளிடம் தற்போதைய பிரதமர் டி.எம். ஜயரட்னவை விரட்டியடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment