(Gtn) யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்த முஸ்லிம் மக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்த முஸ்லிம் மக்கள் தொடர்பில் அறிக்கை தயாரித்து அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த வாரமளவில் அறிக்கை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததன் பின்னர் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பற்றியும், உயிரிழந்த 20000 முஸ்லிம்கள் பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்படும் என தெரிவிக்கப்டுகிறது.
No comments:
Post a Comment