Thursday, January 30, 2014

யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேதங்களை திரட்டுவதை எதிர்க்கும் முஸம்மில்



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தை இலக்கு வைத்து சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.



இந்த சதித்திட்டத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 30 வருட போரில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான அரசாங்கத்தின் புள்ளி விபரங்களுக்கு பதிலாக தனியான நிறுவனம் ஊடாக புள்ளிவிபரங்களை திரட்டுமாறு கோரி வருகிறது என அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.



அரசாங்கம் மேற்கொண்டு வரும் கணக்கெடுப்புக்கு பதிலாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக அதனை மேற்கொள்ள வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுள்ளது.



இதன் மூலம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் சமர்பிக்கும் நோக்கில் அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டு வரும் கணக்கெடுப்புகள் பொய்யானது என காரணம் காட்டு முயற்சிகளில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment