Sunday, January 26, 2014

பிரதமரை பதவியிலிருந்து நீங்கச் சொல்பவர்களிடமிருந்து பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டும்



சமகாலத்தில் பௌத்த தர்மத்தை பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்ளும் சில இயக்கங்கள் கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் தலதாமாளிகைக்கு தாக்குதல் மேற்கொண்ட போது செயற்பட்ட விதம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.



அந்த நிலைமை பாரிய நெருக்கடியாக கருத்தை தோற்றுவிப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தன தெரிவிதுள்ளார்.



அக்குரஸ்ஸ பகுதியில் 26-01-2013 சிறிலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.



தலதா மாளிகை தாக்குதலுக்கு உள்ளாகி பல பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட போது எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டவில்லை.



ஆனால் இன்று பிரதரை பதவியிலிருந்து நீக்குமாறு, அவரை வெளியேற்றுமாறும் பாரிய அளவில குரல்கொடுத்து வருகின்றார். இவர்களிடம் இருந்துதான் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அமைச்சர் மஹிந்த யாப்பா குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment