நாட்டின் இன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சியின் கீழ் அரச வைத்தியசாலைகளு்ககு செல்லும் நோயாளர் ஒருவர் இலவசமாக கழிவறையை மட்டுமே பயன்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச வைத்தியசாலைகளில் இலவசமாக மருந்துகளை பெறமுடியாதுள்ளது. அரசாங்கம் இலவச மருத்துச் சேவையை முற்றாக அழித்துள்ளமை இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகளை தனியார் மருத்துவமனைகளிலும் மருந்துகளை தனியார் மருந்தகங்களிலும் பணத்தை கொடுத்து பெற வேண்டிய நிலைமை நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
போதைப் பொருள் வியாபாரத்திலேயே இன்றைய சர்வாதிகார அரசாங்கத்தின் இருப்பு தங்கியுள்ளது. போதைப் பொருள் வியாபாரத்தை நிறுத்தினால், இந்த அரசாங்கம் கவிழந்து விடும்.
போதைப் பொருள் வர்த்தகத்தை தடுத்து நிறுத்த சர்வதேசத்தின் உதவிகளை பெற்றால் குறுகிய காலத்தில் அதனை நாட்டில் இருந்து ஒழித்து விட முடியும்.
விபச்சார தொழிலில் கைவைத்துள்ள அரசாங்கம், அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்காக வரிச் சலுகைகளையும் வழங்கியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment