(Tw) அரசாங்கத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து அரசின் தவறுகள் மற்றும் மோசடிகளை சுட்டிக்காட்டி வருவதன் காரணமாகவே, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை கைது செய்ய முயற்சித்து வருகிறது என பிரபல நடிகையான நதீஷா ஹேமமாலி தெரிவித்தார்.
தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள ஹேமமாலி மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தனது தவறுகளை மறைப்பதற்காகவே மங்களவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தேடுகிறது. அரசாங்கத்தில் போதைப் பொருள் விற்பனையாளர்கள், பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகள், கொள்ளையர்கள் உள்ளனர். அவர்களின் பிரச்சினைகளை மூடி மறைக்க மங்கள மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
ஆணோ, பெண்ணோ அவர்கள் வயது வந்தவர்கள் என்றால் பலவந்தமின்றி காதல் தொடர்புகளை வைத்திருக்கவும் பாலியல் தொடர்புகளை வைத்திருப்பதும் தவறில்லை என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு.
எனினும் நான் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை. மங்கள சமரவீரவுடன் ஓரினச் சேர்கையில் ஈடுபட்டவர் என்று அரச ஊடகங்கள் பிரசாரப்படுத்தி வரும் இளைஞர் ஒரு குழந்தையல்ல. அவர் ஒரு பிள்ளையின் தந்தை. அந்த இளைஞரை அரசாங்கம் பொறியாக மாற்றப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஓரினச் சேர்கையாளர்களுக்கு எதிராக காலம் கடந்த சட்டத்தை பயன்படுத்தி தண்டனை வழங்குவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
...................................................................................................
எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தோற்கடிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் ஜின்ஜர் வைட் என்ற பிரபல பாடகியை களமிறக்கியுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை துமிந்த சில்வாவின் கோரிக்கைக்கு அமையவே தான் அரசியலுக்கு வந்துள்ளதாக பிரபல பாடகர் நாமல் உடுகமவின் மனைவியான ருவாந்தி மங்களா கூறியுள்ளார்.
இதனடிப்படையில் ஹிருணிகாவுக்கு எதிராக ஜின்ஜர் மற்றும் ருவந்தி ஆகியோரை தேர்தலில் களமிறக்கி பிரசாரங்களை ஆரம்பித்த பின்னர், தமது குடும்ப ஊடகமான ஹிரு ஊடக வலையமைப்பின் ஊடாக பெரும் பிரசாரங்களை முன்னெடுக்க துமிந்த சில்வா தயாராகி வருகிறார்.
No comments:
Post a Comment