Thursday, January 30, 2014

நாட்டில் உணவு நிலையங்களை வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!



(Sfm) இன்றும் நாளையும் நாட்டில் உள்ள அனைத்து உணவு நிலையங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தவிருப்பதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



சுகாதார அமைச்சும், பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.



இதன்படி நாடு முழுவதும் உள்ள உணவு நிலையங்களின் சுகாதார நிலைமையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விசேட சுற்றுவளைப்பு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.


No comments:

Post a Comment