ஜோர்தான் நாட்டில் நான்கு ஆண்களை திருமணம் முடித்திருக்கும் கர்ப்பமுற்ற பெண்ணின் குழந்தைக்கு நான்கு ஆண்களும் உரிமை கோரியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த உரிமையை கோரி கணவர்மார் நீதிமன்றம் வரை சென்றுள்ளனர்.
லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் அல் ஹயாத் அரபு மொழி பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தியில், ஜோர்தானின் வடக்கு நகரான அல் ரம்தா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதில் குறித்த பெண்ணின் இரு சிரிய நாட்டு கணவர்கள், ஒரு ஜோர்தான் மற்றும் ஒரு சவூதி நாட்டு கணவர்மாரே குழந்தைக்கு உரிமை கோரியுள்ளனர்.
எனினும் கர்ப்பமுற்றிருக்கும் பெண் வேறு ஆணை திருமணம் செய்தி ருப்பது தமக்கு தெரியாது என்று அந்த கணவர்கள் நீதிமன்றத்தில் கூறியிருப்பதாக அல் ஹயாத் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட் டுள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க மரபணு சோதனையை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஜோர்தானில் பல ஆண்களை திருமணம் செய்வது சட்டரீதியில் தடைசெய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment