Tuesday, February 25, 2014

இலங்கைக்கு புறப்பட்ட விமானம் தரையிறக்கப்பட்டு 90 கிலோ சிவப்பு சந்தனம் கைப்பற்றப்பட்டது



(India) திருவனந்தபுரத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று மீண்டும் இறக்கப்பட்டு மூவர் இந்திய சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். இதன்போது அவர்களிடம் இருந்து சந்தனம் கைப்பற்றப்பட்டது.



நேற்று முற்பகல் 9.40க்கு இந்த விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. எனினும் இந்திய சுங்க அதிகாரிகளின் கோரிக்கையின்படி விமானம் மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.



இதன்பின்னர் நடத்தப்பட்ட சோதனையின் போது தாய்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட 90 கிலோ சிவப்பு சந்தனம் கைப்பற்றப்பட்டது. அதனை கொண்டு சென்ற மூவரும் கைதுசெய்யப்பட்டனர். இதனையடுத்து விமானம் மீண்டும் கொழும்புக்கு புறப்பட்டு சென்றது.


No comments:

Post a Comment