துட்டகைமுனு மன்னன் மரணித்தது போன்று தான் மரணிக்க விரும்பவில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் தம்மிடம் உள்ள யோசனைகளையும் திட்டங்களையும் விரைவாக என்னிடம் அனுப்பி வையுங்கள். அவற்றை செய்து வேண்டிய தேவை எனக்குள்ளது.
துட்டகைமுனு மன்னன் ருவான்வெளி சேய தாதுகோபுரத்தை நிர்மாணித்து முடிக்கும் முன்னர் இறந்து போனார். நான் அப்படி இறக்க விரும்பவில்லை. ஆரம்பித்த பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.
களனி தொகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை எனக்குள்ளது. களனியில் உள்ள பிள்ளைகளை புத்திசாலித்தனமான பிள்ளைகளாக மாற்ற வேண்டும் என்பதே எனது கனவு.
எமது ஜனாதிபதி சகல இனங்களுடனும் மதங்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுபவர். அவர் தவறான வேலைகளை செய்யும் நபர் அல்ல.
இதனால் ஜெனிவா மாநாட்டின் மூலமாக அவரது ஒரு முடி மீதும் கைவைக்க முடியாது என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment