இந்நாட்டில் சமய விவகாரங்கள் தொடர்பில் சில தவறான புரிந்துணர்வுகள் இருப்பது உண்மைதான் அவற்றை தீர்ப்பதற்குதேவையான மட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பௌஸியின் ஏற்பாட்டில் முஸ்லிம் பிரமுகர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ள கோத்தா மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் சில பாகங்களில் அவ்வப்போது மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படுவதை நாம் அறிவோம். அவற்றை உரியமுறையில் தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். ஆனால் இவற்றை பெரிதுபடுத்தி நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
நாம் இன, மத, கட்சி ரீதியாக பிரிந்துநின்று வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவில்லை. எமது நாட்டில் சில முகாம்களை சேர்ந்தவர்கள் அவ்வப்போது பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். ஆனால் அவர்கள் மிகச்சிறிய குழுவினர். இவர்களை எவ்வாறு கையாள வேண்டுமோ அவ்வாறுதான் நாம் கையாண்டு வருகிறோம்.
No comments:
Post a Comment