Wednesday, February 26, 2014

சவூதி அரேபியாவின் நீதிபதிகளுக்கு பயிற்சி மையம்



நீதித்துறை செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றை சவூதி அரேபியா அரசு துவக்க உள்ளது. சவூதி அரேபியா நீதிபதிகளின் செயல்பாடு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விமர்சனத்துக்கு உள்ளாகும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது.



சவூதி நீதி அமைப்பில் தற்போது, நீதிபதிகள், கடந்த காலத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளை கவனத்தில் கொள்ளாமலேயே, வழக்குகளில் தீர்ப்புகளைத் தர முடிகிறது.



இது உறுதியற்ற நிலைப்பாடுகள் மற்றும் கேள்விக்குறிய முடிவுகளுக்கு இட்டுச்செல்கிறது என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.



இது நாட்டில் முதலீடு செய்யக்கூடியவர்களை பயமுறுத்துகிறது என்று வர்த்தகர்கள் கருதுகிறார்களாம். ஆனால் சவூதி அரேபியாவில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கும் மத விவகாரங்களில் தீவிர நிலைப்பாடு கொண்டவர்கள் நீதித்துறையில் சீர்திருத்தம் செய்ய எடுக்கப்படும் முயற்சிகளை நீண்டகாலமாகவே எதிர்த்து வந்துள்ளனர்.



மார்க்க மற்றும் கலாச்சார அடையாளத்துக்கு நீதித்துறை சீர்திருத்தம் அச்சுறுத்தல் என்று அவர்கள் கருதுவதே இதற்கு காரணம். thoo




No comments:

Post a Comment