Wednesday, February 26, 2014

நிசாம் காரியப்பருக்கு ஒரு வைத்தியரின் கடிதம்..!




Dr. N. Ariff

398A, Al-Hilal Road,

Sainthamaruthu-11.

19. 02. 2014



Mr. Nizam Kariapper

Hon. Mayor,

Municipal Council,

Kalmunai.




சாய்நதமருது ஊரைக் குறுக்கறுத்துச் செல்லும் தோணா ஆற்றைச் சுத்தம் செய்வதற்காக, கௌரவ மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஏ. எம். ஜெமீல் அவர்களின் முயற்சியின் காரணமாக, உங்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் எம். ஐ. எம். ஜெசூர் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக ரூபாய் பதின்மூன்று இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊடகவாயிலாக அறிய முடிந்தது.



அந்த வகையில், இதற்காக முயற்சித்த அனைவரையும் பாராட்டுகின்ற அதேநேரத்தில், சில விடயங்களை தங்கள் முன் கொண்டு வருவது இந்த ஊரைச் சார்ந்தவன் என்ற வகையில் என் மீது கடமையாகின்றது.



பல வருடங்களாக இந்தத் தோணா ஆறு ஏன் சுத்தம் செய்யப்படாமல் இருக்கின்றது என்பதை ஆராய்வதைப் பார்க்கிலும், இது ஏன் எவ்வாறு அசுத்தமடைகின்றது என்பதை அலசினால், அடிக்கடி இவ்வாறு பல இலட்சங்கள் செலவழிக்கப்படுவதை தவிர்க்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.



முக்கியமாக, நாள்தோறும் கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கையில் உசாரற்ற, மந்தமான தன்மை காணப்படுவதால், பொது மக்கள் தங்களின் கழிவுகளை தமது வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்த இந்தத் தோணாவை பாவிக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.



இந்தப் பணத்தைப் பயன்படுத்தி சுத்தமாக்கி விட்டாலும், மீண்டும் இது குப்பை, கழிவுகளால் நிரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாது போனால், இந்த முயற்சி விழலுக்கிறைத்;த நீர் போன்று பயனற்றதாகி விடும்.



எனவே மேற்படி விடயம் சம்மந்தமாக எனது பின்வரும் ஆலோசனைகளைக் கருத்திற் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.



Ø குப்பை, கழிவுகளை நாள்தோறும் அகற்றுவதற்கான நடவடிக்கை

Ø எல்லா வீதிகளிலும் குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் செல்ல முடியாது என்பதனால், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில், பாதகாப்பான குப்பைகளைப் போடக்கூடிய கொள்கலன்களை வைப்பதுடன், அவற்றை தினந்தோறும் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை



Ø குறிப்பாக, தோணாவின் இருமருங்கிலும் மூன்று அல்லது நான்கு பாதுகாப்பான குப்பைகளைப் போடக்கூடிய கொள்கலன்களை வைப்பதுடன், அவற்றை தினந்தோறும் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை



Ø குறித்த தோணாவின் இருமருங்கிலும் கட்டுக்களைக் கட்டி இயற்கையோடிணைந்த ஒரு பொழுது போக்குமிடமாக மாற்றுவதுடன், வருமானம் ஈட்டக்கூடியதாகவும் இருக்கும். மனம் வைத்து முயற்சித்தால் இது முடியாத காரியமல்ல. இவ்வாறு செய்வதனால், இன்னும் சில காலத்தில் இந்தத் தோணா ஆறு தடமில்லாமல் போவதையும் தவிர்க்கலாம்.



மேலும், இந்த விடயங்கள் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை, கமுஃகமுஃமல்ஹருஸ்ஸம்ஸ்; மகளிர் பாடசாலை மற்றும் சாய்ந்தமருது பொது நூல் நிலையம் என்பனவற்றுக்குப் பின்னாலுள்ள நீரேந்து தடாகத்துக்கும் பொருந்தும் என நினைக்கின்றேன்.



நீண்டகாலத் திட்டமிடலின் அடிப்படையில் காரியமாற்றுகின்ற போது, பயன்பாட்டை விருத்தி செய்வதுடன், நேரம், பணம் விரயமாவதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் பொதுமக்களின் மனங்களையும் வென்றுவிடலாம்.



நன்றி.



( Dr. N. Ariff )




No comments:

Post a Comment