Thursday, February 27, 2014

வட்ஸ்அப்பில் பேசும் வசதி - ஜூன் மாதம் அறிமுகமாகிறது..!






வட்ஸ்அப்பில் பேசும் வசதி அடுத்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரபல மொபைல் தொழில்நுட்ப சேவையான வட்ஸ்அப்பிற்கு 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.



கடந்த வாரம் இந்த சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதைத் தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தவுள்ளனர்.



அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் முதல் வட்ஸ் அப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.



முதல் கட்டமாக அண்ட்ரோய்ட், அப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசொப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும்.



தற்போது வட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது. வைபர் போன்ற தொழில்நுட்ப சேவைகள் மூலமாக பேசவும், தகவல்களை அனுப்பவும் முடியும் என்றாலும் வட்ஸ் அப் சேவையே பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment