ஜனநாயக கட்சி, அதன் தலைவர் சரத் பொன்சேகாவின் சர்வதிக்காரத்தின் கீழ் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று 25-02-2014 இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் முன்னாள் ஊடக இணைப்பாளர் சஞ்சீவ சமரசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவரது பணியாளர்களை மிருகங்களின் பெயர்களை சூட்டி அழைப்பதாக அவர் குறிப்பிட்டார். இதன்காரணமாகவே, ஏராளமானவர்கள் அவரது கட்சியிலிருந்து விலகி சென்றதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்ற அறைக்கு பிரவேசித்த ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஊடக இணைப்பாளர் சஞ்சீவ சமரசிங்கவுக்கு இடையே இயல்பற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
No comments:
Post a Comment