Wednesday, February 26, 2014

பிறந்தாலும், திருமணம் செய்தாலும், இறந்தாலும் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டியுள்ளது





இறந்தாலும் அரசாங்கத்திற்கு 2 ஆயிரம் ரூபாவை வரியாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,



குழந்தை ஒன்று பிறக்கும் போதும் அரசாங்கத்திற்கு வரியை செலுத்த வேண்டியுள்ளது. குழந்தை பிறந்ததும் அரசாங்கத்திற்கு 300 ரூபாவை செலுத்த வேண்டும். இதனால் பிள்ளைகள் பிறக்கும் வரை அரசாங்கம் காத்திருக்கின்றது.



திருமணம் செய்யும் போதும் அரசாங்கத்திற்கு 5 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும். எதற்கான நாங்கள் செய்யும் போது அரசாங்கத்திற்கு பணத்தை செலுத்த வேண்டும்?.



இறந்தாலும் விடுவதாக இல்லை. இறந்த பின்னர் வரியாக 2 ஆயிரம் ரூபாவை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்றார்.


No comments:

Post a Comment