(பழுலுல்லாஹ் பர்ஹான்)
அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேசக் கிளையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் 2014-02-21 திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நிதியத்தின் தலைவர் கே.எம்.ஏ. அஸீஸ் ஜேபி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் சொலமன் சுப்ரமணியம் ஜேபி,அதன் செயலாளர் அல்ஹாஜ் ஏ.எம்.அப்துல் காதர் ஜேபி, காத்தான்குடி பிரதேச செயலக நிதி உதவியாளர் எம்.எம்.எம்.மஹ்சூம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன் போது பின்வருவோர் நடப்பு வருட நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் தலைவராக அல்ஹாஜ் கே.எம்.ஏ.அஸீஸ் ஜேபியும் உப தலைவராக மௌலவி எம்.எச்.எம்.புகாரி பலாஹியும் செயலாளராக ஏ.எல்.எம்.சித்தீக் ஜேபியும் உப செயலாளராக எம்.வை.எம். இஸ்மாயிலும் பொருளாளராக எஸ்.எம்.யூசுப் லெப்பை ஜேபியும் நிருவாக சபை உறுப்பினர்களாக ஏ.எல்.அலியார் லெப்பை,ஐ.எல்.எம்.முஹைதீனும் கணக்குப் பரிசோதகராக எம்.எச்.முஹம்மது ஜேபியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment