Wednesday, February 26, 2014

அம்பாறையில் கடும் மழை (படங்கள் இணைப்பு)





(ஏ.ஜி.ஏ.கபூர்)



அம்பாரை மாவட்டத்தில் பரவலாக நேற்று (26.02.2014) நண்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் வெள்ள நிலை தோன்றியுள்ளது.



அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேசங்களிலும் கடும் மழை பெய்கின்றது. இதனால் தாழ்ந்த பிரதேசங்கள் உட்பட உள்ளுர் வீதிகளிலும் மழை நீர் தேங்கி நிற்பதால் வெள்;ள நிலை ஏற்பட்டுள்ளது.



அக்கரைப்பற்றில் தற்போது நடைபெற்று வரும் வடிகாலமைப்பு மற்றும் காபட் , கொங்கிறீட் வீதி அமைப்பு வேலைகள் முடிவடையாமை காரணமாக வடிகான்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இருப்பதால் மழை நீர் சீராகவும், வேகமாகவும்; வடிந்தோட முடியாமல் ஆங்காங்கே தடைப்பட்டு தேங்கி நிற்பதால்; அதிகமான இடங்களில் வீதிகள் நீரில் முழ்கியுள்ளன. இதனால் உள்ளுர் வீதிகளில் பயணிக்கும் பாதசாரிகளும், மோட்டார் சைக்கில் முதலிய சிறிய ரக வாகனமோட்டிகளும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனினும் சில இடங்களில் மழை விட்டதும் மழை நீர் வேகமாக வடியக் கூடிய சூழலும் உள்ளது.



தொடர்ச்சியான அடை மழை காரணமாக மக்களின் சகஜ நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேசங்களில் மும்முரமாக நடைபெற்று வந்த பெரும்போக அறுவடை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். கொங்கிறீட் வீதியில் மழை நீர்; தேங்கி நிற்பதைப் படங்களில் காணலாம்.







No comments:

Post a Comment