மத்திய கிழக்கு நாடுகளில் 400 இலங்கையர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், லெபனான், கட்டார் உள்ளிட்ட சில நாடுகளில் இலங்கையர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக இவ்வாறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கு மேலதிகமாக 135 இலங்கையர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மற்றும் வழக்குத் தொடரப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment