Sunday, March 2, 2014

இருதய சத்திர சிகிச்சைக்கு அவசர உதவியை நாடுகிறார்



அஸ்ஸலாமு அலைக்கும்!



நிந்தவூர் 04 குறிச்சி இலக்கம் 374 A புஹாரி வீதியில் வசிக்கும் முகம்மத்தம்பி உசைன் ஆகிய நான் கடந்த சில மாதங்களாக கடினமான இருதய நோய்க்கு உள்ளாகி உள்ளேன்.



இது தொடர்பாக கொழும்பு வைத்தியசாலை இருதய நோய் சிகிச்சைப்பிரிவின் ஆலோசனைக்கமைவாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் எனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. வைத்தியர்களின் அறிக்கைகளின் பிரகாரம் இதற்காக ரூபா 500 000 (ஐந்து இலட்சம்) செலவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனது குடும்ப மற்றும் பொருளாதார நிலமை மிகவும் வறிய நிலமையில் இருப்பதால் இச்செலவினை என்னால் சுமக்கமுடியாத நிலமையில் உள்ளேன்.



எனவே இது தொடர்பாக என்சார்பில் துஆ செய்யுமாறும், மேலும் தங்களாலான பண உதவிகனை நேரடியாகவோ அல்லது வங்கிமூலமாகவோ வழங்கி இந்த சகோதரனுக்கு உரிய காலத்திற்குள் சத்திரசிகிச்சை மேற்கொள்ள உதவி புரியுமாறும் தங்களை மிகவும் தழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.



எனது தொலைபேசி இலக்கம்: 0771937330, 077 4419372



எனது வங்கி இலக்கம்: இலங்கை வங்கி கணக்கு இலக்கம்: 75691011



இறைவன் இம்மையிலும் மறுமையிலும் தங்களுக்கு அருள்பாலிப்பானக!

















No comments:

Post a Comment