Saturday, March 8, 2014

பௌத்த பிக்குகளும் மனிதர்களே, அவர்கள் அரசியல் செய்வதை தடைசெய்யக் கூடாது



பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதனை தடை செய்யக் கூடாது என பத்தரமுல்ல சீலரட்ன தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான அமரபுர மஹா பீடம், அந்தப் பீடத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதனை தடை செய்துள்ளது.இந்த நடவடிக்கையானது கண்டனத்திற்குரியது என ஜனசெத்த பெரமுன கட்சியின் தலைவரும், பௌத்த பிக்குவுமான சீலரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.



தாம் சியாம் பீடத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு எனவும், இவ்வாறான ஓர் தடை தமது பீடத்தினால் பிறப்பிக்கப்பட்டால் அதற்கு எதிராக உள்நாட்டு சர்வதேச சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



பௌத்த பிக்குகளும் மனிதர்களே எனவும் அவர்கள் அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை எனவுமு; அவர் குறிப்பிட்டுள்ளார். தடை விதிக்கப்பட்டால், அடிப்படை மனித உரிமைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். gtn


No comments:

Post a Comment