பொதுபல சேனா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என தவ்ஹித் ஜமாத் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை வன்மையாக கண்டிப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இவ்வாறான கருத்துக்கள் மூலம் பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை ஸ்தம்பிக்கச் செய்து, பௌத்தர்களை ஆத்திரமூட்டுவதே தவ்ஹித் ஜமாத் அமைப்பின் நோக்கம்.
சம்பிரதாயபூர்வமான முஸ்லிம் மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலையும் மோதலான நிலைமையையும் ஏற்படுத்த அந்த அமைப்பு முயற்சித்து வருகிறது.
பௌத்த அமைப்புகளை தடை செய்யுமாறு கருத்துக்களை முன்வைத்து, பௌத்த சமூகத்திற்குள் சிக்கலான நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என தவ்ஹித் ஜமாத் அமைப்பிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment