இலங்கையில் மத முரண்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் மத ரீதியான மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வாறு மத முரண்பாடுகள் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது.
நீண்ட இடைவெளியின் பின்னர் பஹ்ரெய்னுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிட்டியமை மகிழ்ச்சியளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பஹ்ரெய்ன் வாழ் இலங்கை மக்களைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இந்த விஜயத்தின் போது அமைச்சர் றிசாத் பதியுதீனும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment