Wednesday, April 16, 2014

பயங்கரவாத அமைப்பான பொதுபல சேனாவை உடனடியாக அரசு தடைசெய்ய வேண்டும் - அமைச்சர் வாசு



பொது பல சேனா அமைப்பை உடனடியாக அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிங்கள பௌத்தர்கள் என்ற போர்வையில் இயங்கும் பயங்கரவாத அமைப்பே பொது பல சேனா என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,



சிங்கள பௌத்தர்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் வெளிநாடுகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏனைய முஸ்லிம் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை இவ் அமைப்பு கட்டவிழ்த்து விட்டுள்ளது.



அத்தோடு தமக்கு அரசு தரப்பு ஆதரவு உள்ளதாக வெளிக்காட்டிக் கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்யும் நாடுகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றது.



இதனால் சர்வதேச ரீதியில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகினறது. இவ் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்த TRAC அமைப்பை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.



ஆனால் என்னைப் பொறுத்தவரை பொதுபல சேனா ஒரு பயங்கரவாத அமைப்பாகும். எனவே இதனை உடனடியாக தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.




No comments:

Post a Comment