ஆசிரியை ஒருவரிடமிருந்து கப்பம் பெற முற்பட்டதாக தெரிவித்து இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் மேல் மற்றும் வட மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகளை கடத்துவதாக அச்சுறுத்தி வத்தளை பிரதேச ஆசிரியை ஒருவரிடம் 18 இலட்சம் ரூபா கப்பத் தொகையை இவர்கள் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஓய்வுபெற்ற பெண் அதிபர் ஒருவரும், 35 வயதான அவரது உறவினரான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆசிரியையை அச்சுறுத்தி அவ்வப்போது சந்தேகநபர்கள் கப்பம் பெற்றுவந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆசிரியையிடமிருந்து மேலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கப்பமாக பெற முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment