(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
ஜக்கிய தேசியக்கட்சியின் மே தினக்கூட்டம் இன்று 01-05 -2014 மாலை அம்பாரையில் நடைபெற்றது.
ஜக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூர்ய தலைமையில் அம்பாரை பஸ்; நிலையத்திற்கருகில் நடைபெற்ற இக்கூட்டத்திலும் பேரணியிலும் நாட்டின் பல பாகங்களிலிமிருந்தும் வருகைதந்திருந்த ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
ஜக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனோமாகமகே ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தனாயக தவிசாளர் கபீர்ஹாஷிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைகல்பெரேரா.மங்கள சமரவீர லக்ஷ்மன் கிரியல்ல ஹரீன் பெர்னான்டோ அகில விராஜ் காரியவசம் இரான் விக்ரம ரத்ன பீ.ஹரிஸன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment