உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சியை, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தடுத்து வருவதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தல் உள்ளிட்ட சில யோசனைத் திட்டங்கள் அமைச்சர்களினால் முன்வைக்க்பபட்டது என அவர் குறி;ட்டுள்ளார்.
தாம் உள்ளிட்ட சில அமைச்சர்களினால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் கருத்துக்களுக்கு ஜனாதிபதி கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. gtn
No comments:
Post a Comment