Friday, May 2, 2014

பிள்ளை பெறுவதற்காக சென்ற கர்ப்பிணி தாயை படுகொலை செய்த வைத்தியர்கள் (படங்கள்)



(Tw) பிரசவத்திற்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது குடல் வெட்டுண்டு உயிரிழந்துள்ளார்.



நாவலப்பிட்டி நீதவான் சமந்தி மாத்தறகே நேற்று முன்தினம் நடத்திய மரண விசாரணைகளின் போது இந்த சம்பவம் பற்றி தெரியவந்துள்ளது.



கெட்டபொலா வெஸ்மோலா தோட்டதைச் சேர்ந்த 32 வயதான தமிழ் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



முதல் பிரசவத்திற்காக பேராதனை வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்த போது பிறந்த குழந்தை இறந்து போனது, இரண்டாவது குழந்தை பேறுக்காக அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் தந்தையான மோகன் ராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



சம்பவம் குறித்து கணவர் சாட்சியமளிக்கையில்,



அறுவை சிகிச்சையின் பின்னர், குழந்தையும் தாயும் விடுதிக்கு கொண்டு வரப்பட்டனர். விடுதிக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், மனைவியின் வயிறு வீங்க ஆரம்பித்தது.



இது குறித்து மருத்துவர்களிடம் கூறிய போது அதற்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் தெரிவித்தனர்.



அறுவை சிகிச்சை செய்து மனைவியை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றனர். விபரங்களை கேட்ட போது சரியான தகவல்களை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.



இந்த சம்பவம் குறித்து வைத்தியசாலை பொலிஸாருடன் இணைந்து நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments:

Post a Comment