Sunday, May 4, 2014

தண்ணீருடன் போத்தலையும் சாப்பிடலாம்



தண்ணீரை குடித்த பின், பாட்டிலை தூக்கி எறியாமல், அதையும் சாப்பிடும் வகையிலான பொருளை, பிரிட்டன் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



குழாயில் வரும் நீரைக் குடித்த காலம் மாறி விட்டது. 'மினரல் வாட்டர்' என்ற பெயரில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பருகுவது, காலத்தின் கட்டாயமாகி விட்டது. சுவையில், ஜெல்லி மீனைப் போன்று இருக்கும் இந்த தண்ணீர் பாட்டில், உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இந்த பாட்டிலை வடிவமைத்துள்ளனர். முதலில், தண்ணீரை ஐஸ்கட்டியாக்கி, கால்சியம் குளோரைடு கரைசலில் போட்டு எடுப்பதால், ஐஸ்கட்டியின் மீது, ஜெல்லி போன்ற மேலுறை உருவாகிறது. இந்த தண்ணீர் பந்தை, பழுப்பு பாசி சாற்றில் நனைப்பதால், அதன் மேல் பகுதி கடினமாகிறது. இதை மீண்டும், பாசி கரைசலில் போட்டு எடுத்தால், தண்ணீர் நிரம்பிய புட்டி ரெடி. ஐரோப்பிய நகரங்களில், 'ஓஹோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தண்ணீர் பாட்டில், பரிசோதனை முறையில் வினியோகிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment